இவ்வாரம் வெளியாகி போட்டிக்கு தயாராகும் படங்கள் எவை தெரியுமா..?

0
747
May 11 release Tamil movies competition,May 11 release Tamil movies,May 11 release Tamil,May 11 release,May 11

(May 11 release Tamil movies competition)

தமிழ் சினிமாவில் 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் துவக்கவில்லை.

இந்நிலையில், இந்த வாரம் தான் ஸ்டார் படங்கள் ரிலீஸ் ஆவதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றிய குறிப்பை பார்க்கலாம்.

ஸ்ட்ரைக் நிறைவடைந்தபிறகு வெளியான ”மெர்க்குரி”, ”பக்கா”, ”தியா” உள்ளிட்ட படங்களும் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை. கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அடல்ட் படமான ”இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் தான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் அள்ளி வருகிறது.

மேலும், ஸ்ட்ரைக்குக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் மூன்று படங்கள் என வரைமுறைப்படுத்தி புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தால் ஒழுங்குபடுத்தல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கமிட்டியே படங்களை ரிலீஸுக்கு அனுமதித்து வருகிறது.

அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை அன்று தமிழில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஷால், சமந்தா நடித்துள்ள ”இரும்புத்திரை”, அருள்நிதி நடித்திருக்கும் ”இரவுக்கு ஆயிரம் கண்கள்”, அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

அவை தவிர, நாளை (மே 9) கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் ஆகியோர் நடித்துள்ள சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ”மகாநதி” ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (மே 11) அன்று ”நடிகையர் திலகம்” என்ற டைட்டிலோடு வெளியாகிறது.

அத்துடன், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ள ”இரும்புத்திரை” திரைப்படம் சைபர் வார் எனும் தகவல் தொழில்நுட்ப போர் பற்றியதாக உருவாகியிருக்கிறது.

சைபர் குற்றங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை சீரியஸாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரொமான்ஸ் ஆக்‌ஷன் கலந்த கமர்சியல் படமாக இது இருக்கும்.

மேலும், அருள்நிதி – மஹிமா நம்பியார் நடிப்பில், மு.மாறன் இயக்கியுள்ள ”இரவுக்கு ஆயிரம் கண்கள்” படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சீட் நுனிக்கு வரவழைக்கும் பல காட்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன், மலையாளத்தில் வெளியான ”பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தின் ரீமேக்கை தமிழில் அரவிந்த்சாமி, அமலாபால் ஆகியோரை வைத்து இயக்கியுள்ளார் சித்திக். மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா ஆகியோர் அர்விந்த்சாமியின் மகன், மகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாரம் ரிலீஸாகவுள்ள, நடிகையர் திலகம் படமானது சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

மேலும், சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நிருபர்களாக நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழில் மிகுந்த எதிர்பார்ப்போடு ரிலீஸாகிறது இந்தப் படம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-May 11 release Tamil movies competition

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்