(emanuel arnold warned Yogeswari Patkunarajah)
யாழ்ப்பாண மாநகர சபையின் மாண்பைப் பேணுமாறு ஈபிடிபியின் மாநகர உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராசாவை மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் கடந்த அமர்வில் உரையாற்றிய உறுப்பினர்கள் இருவர் தமிழீழம் தான் எமது தாயகம் என பேசியிருந்தனர்.
எனினும் அவர்களின் அந்தக் கருத்து சபை நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெறவில்லை. அதனை கட்டாயமாகச் சேர்க்கவேண்டும்’ என்று உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராசா கேட்டுக்கொண்டார்.
அவர் இந்தக் கருத்தை இருக்கையில் இருந்தவாறே வலியுறுத்தினார். அவர் சபையின் மாண்பைப் பேணுகின்ற வகையில் எழுந்து நின்று கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே சபையால் அதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும் என முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இராண்டாவது அமர்வு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதன்போதே இந்தக் கருத்தை முதல்வர் வலியுறுத்தினார்.
‘மருத்துவ காரணங்களால் எழுந்துநின்று உரையாற்ற முடியாது. அதுதொடர்பில் மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். சபையில் எழுந்து நின்றுதான் கருத்தை வெளியிடவேண்டும் என்ற நியதி கிடையாது. அதுதொடர்பில் வர்த்தமானி அறிவிப்பும் இல்லை’ என்று ஈபிடிபியின் மாநகர உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
‘நாடாளுமன்றம் முதல் அனைத்து அதிகார சபைகளிலும் எழுந்து நின்றே கருத்தை வெளியிட முடியும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதனையே இங்கும் வலியுறுத்துகின்றேன். மருத்துவ காரணங்கள் இருந்தால், அதுதொடர்பில் சபைக்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்து முன் அனுமதி பெற்றிருக்கவேண்டும். சபையின் மாண்பைப் பேணுவதற்கு எழுந்து நின்று நீங்கள் கருத்தை வெளியிட்டால், அதுதொடர்பில் கவனம் செலுத்தப்படும்’ என்று முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கேட்டுக்கொண்டார்.
More Tamil News
- மன்னாரில் மின்னல் தாக்கம் ; மூன்று வீடுகள் சேதம்
- ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து ; சுற்றுலாப் பயணிகளே அவதானம்
- இரு கட்சிகளிடையே மோதல்; மூவர் தப்பியோட்டம்
- தமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்
- மாணவனின் புத்தகப் பையில் விஸ்கி போத்தல்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- மண்சரிவினால் 87 குடும்பங்கள் பாதிப்பு
- 08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
- பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; emanuel arnold warned Yogeswari Patkunarajah