ஆம்ஸ்டர்டம் உணவகத்தை மூடச் செய்த கரப்பான் பூச்சி!!

0
894
cockroach soup closes Amsterdam restaurant, cockroach soup closes Amsterdam, cockroach soup closes, soup closes Amsterdam restaurant, closes Amsterdam restaurant, Tamil Netherland news, Netherlands Tamil news

cockroach soup closes Amsterdam restaurant

வாடிக்கையாளர்  ஒருவர் தனது சூப்பில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்ததை அடுத்து, டச் உணவு மற்றும் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு அதிகார நிறுவனம் NVWA, ஆம்ஸ்டர்டாமில் Warmoesstraat என்ற பகுதியிலுள்ள Kam Yin உணவகத்தை மூடியது.

வாடிக்கையாளர் சூப்பை ஆர்டர் செய்து வீட்டிற்கு எடுத்து சென்று பிரித்து பார்த்த போதே அதில் கரப்பான் பூச்சியை கண்டு, படம் பிடித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டார். இதை வலைதளத்தில் கண்ட அதிகாரிகள் அந்த உணவகத்தை சோதித்தனர்.

“எங்கள் ஆய்வு அறிக்கை உண்மையில் இந்த உணவகத்தில் கரகரப்பான் பூச்சி மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன” என்று ஒரு NVWA செய்தித் தொடர்பாளர் உறுதி அளித்தார்.

சோதனை செய்த மறுகனமே, உணவகம் உடனடியாக மூடப்பட்டது. உணவக உரிமையாளர்கள் அடுத்த சோதனையை NVWA கோர முன் உணவகத்தை முறையே சுத்தம் செய்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு மறு பரிசோதனையின் போது உணவகம் ஒழுங்கான முறையில் இருந்தால் மறுபடியும் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்..

 

cockroach soup closes Amsterdam restaurant, cockroach soup closes Amsterdam, cockroach soup closes, soup closes Amsterdam restaurant, closes Amsterdam restaurant, Tamil Netherland news, Netherlands Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/07/american-firms-billion-dollar-tie/

Tamil News Groups Websites