மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

0
1074
11 members not attend May Day event

(11 members not attend May Day event)
தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் குழுவிலுள்ள 11 உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற மே தின பேரணில் கலந்துகொள்ளவில்லை.

முன்னாள் அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சுசந்த புஞ்சிநிலமே, சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, லக்ஷ்மன் வசந்த பெரேரா, அனுராத ஜயரத்ன, தாரனாத் பஸ்நாயக்க மற்றும் டி.பி. ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்கப்படுவர்.

மேலும், இந்தப் 12 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் காலியில் நடைபெற்ற மே தின பேரணியிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் அறியமுடிகின்றது.

எனினும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சுமேதா பீ.ஜயசேன இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேடையில் இருந்துள்ளனர்.

அத்துடன், குறித்த பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் மே தின பேரணியில் கலந்துகொண்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேடையில் அமராது வெளியில் இருந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 11 members not attend May Day event