கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!

0
1056
Aishwarya Rai attend Sonam Kapoor wedding,Aishwarya Rai attend Sonam Kapoor,Aishwarya Rai attend Sonam,Aishwarya Rai attend,Aishwarya Rai

(Aishwarya Rai attend Sonam Kapoor wedding)

ஐஸ்வர்யா ராயுடன் சமாதானம் ஆகி அவரை தனது திருமணத்திற்கு அழைத்துள்ளார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்.

அதாவது, பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் மும்பையில் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயுடனான பிரச்சனையை முடித்து வைத்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து தனது திருமணத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஐஸ்வர்யாவும் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயை ஆன்ட்டி என்று கூறினார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. என் அப்பா அனில் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பதால் ஆன்ட்டி என்றேன் என விளக்கம் அளித்தார் சோனம்.

சோனம் ஆன்ட்டி என்று கூறியதில் இருந்து அவருக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பனிப்போர் நடந்தது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா கண்ணை பறிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டதையும் விமர்சித்தார் சோனம். இது ஐஸ்வர்யா ராயை மேலும் கோபம் அடைய வைத்தது.

மேலும், நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு சோனம் ஐஸ்வர்யா ராயை தனது திருமணத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு வருவாரா என்பது பெரிய கேள்வி.

அமிதாப் பச்சன், ஜெயா, அபிஷேக் பச்சன் ஆகியோரை சோனமின் தந்தை அனில் கபூர் மற்றும் தாய் சுனிதா ஆகியோர் அழைத்துள்ளனர். அனில், சுனிதா ஐஸ்வர்யா ராயையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளனர்.

அத்துடன், சோனமின் திருமணம் வெளிநாட்டில் பிரமாண்டமாக நடப்பதாக இருந்தது. ஆனால் பெரியம்மா ஸ்ரீதேவி இறந்த நிலையில் பிரமாண்டம் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார் சோனம். இதையடுத்து திருமணம் மும்பையில் எளிமையாக நடக்கிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!

தேசிய விருது வழங்கும் நிகழ்வில் ஏமாற்றம் அடைந்த நடிகை பார்வதி..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!

சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Aishwarya Rai attend Sonam Kapoor wedding

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

23 பேருக்கு பதவி நியமன கடிதங்கள்