அதிக கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றிய ஒரேயொரு கட்சி

0
581
absolutely dedication united national party prime minister ranil

absolutely dedication united national party prime minister ranil
நாட்டின் உழைக்கும் மக்களின் நன்மைக்காக அதிக கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பெற்றது.

உழைக்கும் மக்கள் வர்க்கம் மத்திய வருமான வர்க்கத்திற்குள் பிரவேசிப்பதற்கான கதவுகளை திறந்த பெருமை ஐக்கிய தேசிய கட்சியை சாரும் என்று குறிப்பிட்ட பிரதமர், ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளை மேம்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கு முறையாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் மக்கள் எதுவித அச்சமும் இன்றி வாழக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தற்சமயம் கிரமமாக மீள செலுத்தப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்கால தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கபடும் என்றும் கட்சியின் பிரதான பதவிகளுக்கு இளம் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
absolutely dedication united national party prime minister ranil

More Tamil News

Tamil News Group websites :