மாவடிவேம்பில் ஜனாதிபதி தலைமையில் மேதின கூட்டம்

0
544
may day batticollow president include higher political

may day batticollow president include higher political
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்;பில் நடைபெறுகின்றது.

தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி என்பதே இதன் தொனிபொருளாகும்.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் வழமை போன்று கொழும்பு பீஆர்சி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயின் மேதின கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் இன்று காலை கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறுகின்றது.

கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் ஆரம்பமாகும் ஊர்வலம் புதிய நகர மண்டபத்தை சென்றடையும்.

அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்தும் மே தினக் கூட்டங்கள், கொழும்பில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
may day batticollow president include higher political

More Tamil News

Tamil News Group websites :