நான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா

0
1451
Sarath fonseka comment former mahinda rajapaksa government

(Sarath fonseka comment former mahinda rajapaksa government)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சி அமைத்தால் தான் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வது உறுதி என அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சர் சரத் பொன்சேகாவின் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதிலும், இராணுவத்தில் இருந்த தனக்கு பொலிஸாரை வழிநடாத்த முடியாது என அமைச்சை வழங்காமல் இருப்பதற்கு நியாயம் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், அவற்றுக்கு சாட்சிகளும் உள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சட்டம், நீதி சகலருக்கும் சமமாக இருந்தால், இவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Sarath fonseka comment former mahinda rajapaksa government