சொந்த செலவில் சூனியம் – 5000 ரூபாய் அபராதம்

0
553
road development no permission court five thousand fine

road development no permission court five thousand fine
பதிய பெலல்ல – வியன்வல மடுமான சந்தியில் இருந்து கலபெலியாவ வரையான திவன வரல்காட்டிய வீதியின் இரண்டு பக்கங்களிலும் கடந்த 45 ஆண்டுகளாக வசிக்கின்ற 36 குடும்பங்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி கட்டாயமாக தேவைப்படுகின்ற 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 250,000 ரூபா பணத்தை செலவிட்டும் தமது சொந்த நிலங்களில் ஒரு பகுதியை தியாகம் செய்தும் ,ந்தப் பாதையை புனரமைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக கிராம சேவகருக்கும் அபிவிருத்தி அதிகாரிக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியை விரிவாக்கம் செய்வதற்காக பிரதேசத்தின் சிலர் சுய விருப்பத்தில் வழங்கிய நிலத்தில் இருந்த பலா மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம சேவகரும் அபிவிருத்தி உத்தியேகத்தரும் கூட இந்த பலா மரங்களை முழுமையாக வெட்டி அகற்றிவிடுமாறு கூறியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வீதி விரிவாக்கம் நிறைவடைந்ததன் பின்னர் எழுத்துமுல அனுமதி பெறவில்லை என்று கிராம சேவகரால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, வலப்பனே மாவட்ட நீதிமன்றத்தில் இந்த 36 குடும்பங்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
road development no permission court five thousand fine

More Tamil News

Tamil News Group websites :