(NEAT Examination extraordinary situation continuously imposed)
தமிழகத்தில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலையின் தொடர்ச்சியாக எங்கள் மாணவச் செல்வங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாக நீட் பரீட்சை (மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான பரீட்சை ) என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலையின் தொடர்ச்சியாக எங்கள் மாணவச் செல்வங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாக நீட் பரீட்சை இருக்கிறது.
இன்று அந்தத் தேர்விலும் கூட எம் பிள்ளைகள் போட்டியிட்டு வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக தமிழ் நாட்டில் பரீட்சை மையங்கள் அமைக்காமல் வெளி மாநிலங்களுக்கு அவசர கதியில் போய்ச்சேர வேண்டிய வன்மையான நிலையை உருவாக்கி இருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு.
இந்த இக்கட்டான சூழலை எம் பிள்ளைகள் மன வலிமையோடு எதிர்கொள்ள தயாரானாலும் பரீட்சை மையத்தை நெருங்கிவிட முடியாத நிலையும் வலிந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எம் பிள்ளைகளின் உழைப்பும் முயற்சியும் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதே மைய அரசின் நோக்கம்.
எனவே பரீட்சை எழுத அயல் மாநிலங்களுக்கு செல்லும் எம்மாணவ செல்வங்கள் பரீட்சை மையத்துக்குசென்று பரீட்சை எழுதி, தாயகம் திரும்புவதற்கான விமான பயண ஏற்பாட்டை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்து தருவதோடு எம்பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
கடந்த ஆண்டு நீட்டை எதிர்த்த தமிழகம், மையம் அமையுங்கள் என்று கேட்க வைத்ததன் மூலமாக பா.ஜ.க. அரசின் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டதாக மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கப்போவது உறுதி. தமிழகம் நீட்டை ஏற்று கொண்டது என்கிற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிற முயற்சியில் நீங்கள் தோற்கப் போவது உறுதி.
எங்கள் பிள்ளைகள் உள்ளம் சோர்ந்து விடாமல் இருக்கவே நாங்கள் இப்போது நீட் பரீட்சை விடயத்தை அற வழியில் கையாளுகிறோம். பரீட்சைக்காக வெளிமாநிலம் செல்லும் எம் பிள்ளைகளுக்கு ஏதேனும் துயரங்கள் நேர்ந்தால் அங்கு இருப்பவர்கள் எதிர்வரும் காலத்தில் எதற்காகவும் தமிழகத்தில் கால்வைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
இந்த நேரத்தில் கேரளாவுக்கு பரீட்சை எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
(NEAT Examination extraordinary situation continuously imposed)
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு