child age thirteen fifteen sixteen school girls abuse fathers nuwaraeliya
நுவரெலிய மாவட்டத்தில் 3 மாணவிகளை தொடர்ச்சியாக துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்தமை தொடர்பில் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக கந்தப்பளைக் காவற்துறையினர் தெரிவித்தள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Update…
வேலியே பயிரை மேய்ந்தது போல் தந்தையர்கள் இருவர் தங்களது புதல்விகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நுவரெலிய மாவட்டத்தில் அரங்கேரியுள்ளது.
பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச இருவட்டுக்களை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தந்தையர்களின் வழக்கமான செயல்களில் ஒன்றாக காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீடித்து வந்த தந்தையர்களின் கொடூர செயலினால், உள மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் திடீர் என தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டனர்.
தந்தையர்களுடன் தொடர்ந்து வசிக்கும் பட்ச்சத்தில் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்பட வேண்டும் என கருதி குடும்பத்தில் இருந்து விலகி கொள்வதற்காக கொழும்பிற்கு பயணித்துள்ளனர்.
கொழும்பிற்கு வந்த சிறுமிகள் எங்கு செல்வது, என தெரியாது தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் காவற்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.
சிங்கள மொழியும் புரியாத நிலையில் காவற்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத சிறுமிகளை தனியே ஓர் அறையில் காவற்துறையினர் தங்கவைத்துள்ளனர்.
சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட அறையில் சி.சி.டி.வி கெமரா மற்றும் குரல் பதிவு செய்யும் கருவிகளை பொருத்தி வைத்துள்ளனர்.
சிறுமிகள் உரையாடுவதனை பதிவு செய்து கொண்ட காவற்துறையினர், அதனை செவியுற்ற போதே தந்தையர்களிடம் பாலியல் துன்பங்களை அனுபவித்த சம்பவம் அம்பலமாகியது.
இந்நிலையில், நுவரெலிய காவற்துறைக்கு அறிவித்து தந்தையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு உடந்தையாக செயற்பட்ட தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் குறித்த தந்தையர்களுக்கு ப்ளு பில்ம் { ஆபாச பட சீடி }க்களை வழங்கிய தோட்ட காவலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
child age thirteen fifteen sixteen school girls abuse fathers nuwaraeliya
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com