ஏர் பிரான்ஸ் தலைவர் ராஜினாமா!

0
673
Air France head resignation

ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் முதலாளி Jean-Marc Janaillac நேற்றைய தினம் தன் ராஜினாமாவை அறிவித்தார். ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் பல வார வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆலோசிக்கப்பட்ட ஒரு ஊதிய ஒப்பந்தத்தை நிராகரித்தால் ராஜினாமா செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.(Air France head resignation)

“ஏர் பிரான்ஸ் ஊழியர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன், என் ராஜினாமா கடிதங்கள் வரவிருக்கும் நாட்களில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்திற்கு அனுப்பப்படும்,” என்று கூறினார். 55.44 சதவீத ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் நான்கு ஆண்டுகளில் 7 சதவீத சம்பள உயர்வை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக வாக்களித்தனர். இதனாலேயே அவர் ராஜினாமா செய்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏர் பிரான்ஸ் 269 மில்லியன் யூரோக்கள் நிகர இழப்பை அடைந்ததாக அறிவித்துள்ளதுடன், வேலைநிறுத்தம் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 300 மில்லியன் யூரோக்களை செலவழிப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**