இந்திய வீரர்களில் இவர் மட்டும்தான்! : புதிய சாதனையை நிகழ்த்திக்காட்டிய ரோஹித் சர்மா!!!

0
578
Highest sixes T20 matches Indian news Tamil

(Highest sixes T20 matches Indian news Tamil)

இந்திய அணியின் முன்னணி வீரரான ரோஹித் சர்மா “ஹிட்மேன்” என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

அவருக்கு ரசிகர்கள் வைத்திருக்கும் பெயருக்கு ஏற்றப்படியே பல போட்டிகளில் அதிரடியின் மூலம் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

தற்போது ஐ.பி.எல். தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிவரும் ரோஹித் சர்மா இருபதுக்கு-20 போட்டிகளில் 300 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

நேற்யை தினம் நடைபெற்ற போட்டியில் 17வது ஓவரில் முதலாவது சிக்ஸரை விளாசியதனூடாக தனது 300வது கிக்ஸரை ரோஹித் சர்மா கடந்துள்ளார்.

இருபதுக்கு-20 போட்டிகளில் 300 சிக்ஸர்களை கடந்த முதலாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக சுரேஷ் ரெய்னா 290 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இருபதுக்கு-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் கிரிஸ் கெயில் 842 சிக்ஸர்களுடன் முதலிடத்தையும், கிரன் பொல்லாரட் 525 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், மெக்கலம் 445 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

<<Tamil News Group websites>>