{ Tian Chua nomination case }
மலேசியா பொதுத்தேர்தலில், பத்து தொகுதியில், வேட்புமனுத் தாக்கல் செய்ய தனக்கு தடை விதித்ததை எதிர்த்து பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா செய்திருந்த மேல்முறையீட்டை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுஆய்வு செய்வது உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதில்லையென நீதிபதி நோர்டின் ஹசான் கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகே, தனது வேட்புமனு நிராகரிக்கப் பட்டது தொடர்பில், தியான் சுவா தேர்தல் மேல்முறையீட்டைச் செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின்போது, தியான் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டது. கடந்த மாதம் நீதிமன்றம் அவருக்கு ரிம.2 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் அதிகாரி அன்வார் முகமட் சாயின் கூறியிருந்தார்.
அதையடுத்து, தேர்தலில் தாம் போட்டியிட முடியுமா என்பது குறித்து விசாரிக்க, அவர் கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்துள்ளார்.
கடந்த மாதம், ஷா ஆலாம் நீதிமன்றம் ரிம.2 ஆயிரம் அபராதம் விதித்ததால் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு, ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து முட்டாள் என இழிவுபடுத்தியதால் அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
தொடக்கத்தில் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ரிம.3 ஆயிரம் அபராதத்தை விதித்தது. தியான் சுவா மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அபராதத் தொகை ரிம.2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.
ஒருவேளை, அந்த அபராதத் தொகை, ரிம.1,999-க்குக் கீழ் இருந்திருந்தால், தியான் சுவாவின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Tian Chua nomination case
<< TODAY RELATED MALAYSIA NEWS>>
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!