சட்டவிரோத பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை

0
879
Siege illegal polythene factory Colombo Mattakkuliya

(Siege illegal polythene factory Colombo Mattakkuliya)
கொழும்பு – மட்டக்குளி பொவிஷன் வீதியில் இயங்கிவந்த பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலையொன்றை மத்திய சுற்றாடல் சபையின் குழுவொன்று முற்றுகையிட்டது.

குறித்த தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு பொதிகளுக்கான பொருட்களை இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் 4 இயந்திரங்கள் மூலம் உணவு பொதி செய்வதற்கான பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த தொழிற்சாலையை முற்றுகையிட்டுள்ளதாகவும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிப் போகாத பொலித்தீன் உட்பட பொலித்தீன் உற்பத்தியும் அதன் பாவனையும் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து முற்றாகத் தடை செய்யப்பட்டது.

தேசிய, மத கலாசார அரசியல் வைபவங்கள் உள்ளிட்ட எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் அலங்கரிப்புக்கென பொலித்தீன் பயன்படுத்துவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனை மீறிச் செயற்படும் வர்த்தகர்களை கைது செய்ய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய சுற்றால் அதிகார சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே மட்டக்குளிப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Siege illegal polythene factory Colombo Mattakkuliya