{ Mahatir go castle Najib }
மலேசியாவில், ரவுப் மற்றும் லிப்பீஸ் ஆகிய தொகுதிகளில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பிரசாரம் செய்து வரும் வேளையில், அவரின் கோட்டையான பெக்கான் தொகுதியில் துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரச்சாரம் செய்துள்ளார்.
பெக்கான தொகுதியில் பிரதமர் நஜிப் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தொகுதியில் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான டாக்டர் மகாதீர், பெக்கானில் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு பிரச்சாரம் செய்துள்ளார்.
மலேசியர்கள் யாருக்கும் இல்லாத சிறப்பு உரிமை பெக்கான் மக்களுக்கு உண்டு எனவும், அந்த உரிமையைக் கொண்டு, அவர்கள் நஜிப்பை வீழ்த்தலாம் என்று மகாதீர் கூறியுள்ளார்.
“பெக்கான் மக்களால் தான் நஜிப்பை ஓரங்கட்ட முடியும். தனது சொந்த போர்க் களத்திலேயே நஜிப் தோற்க வேண்டும்” என்று மகாதீர் கூறியுள்ளார்.
மகாதீரின் இந்தப் பிரச்சாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான துன் டாயிம் ஸைனுடின், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மகாதீரின் பேச்சைக் கேட்க மக்கள் பலர் அங்கு கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: Mahatir go castle Najib
<< TODAY RELATED MALAYSIA NEWS>>
*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா
*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!
*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!
*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!