மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு எதிராக, SNCF ஊழியர்களின் ஏழாம் கட்ட இரு நாட்கள் பணிப் பகிஷ்கரிப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதன்கிழமை இரவு 11 மணி அளவில் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு, நேற்று வியாழக்கிழமை நாள் முழுவதும் நீடித்து, இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கின்றது.Limited rail services SNCF strike
இன்றைய தினம் (மே 4), இரண்டில் ஒரு TGV யும், இரண்டில் ஒரு Transilien சேவைகளும், ஐந்தில் இரண்டு TER சேவைகளும், மூன்றில் ஒரு Intercity உம் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வேறு நாடுகளுக்குச் செல்லும் புகையிரதங்களில் ஐந்தில் மூன்று புகையிரதங்களும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இல்-து-பிரான்சுக்குள், RER சேவைகள் கணிசமாக பாதிக்கப்படும். மேலும், RER A, RER B ஆகிய இரு சேவைகளும் இரண்டில் ஒன்று என்ற கணக்கிலும், RER C மூன்றில் ஒரு சேவை என்ற கணக்கிலும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**Most related Tamil news**
- பிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்!
- மெர்க்கலின் சுயரூபம் இது தான்! திருமணத்தை நிறுத்த கோரும் கடிதத்தால் பரபரப்பு!
- சமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்!
- ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி!
**Tamil News Groups Websites**