தற்பொழுது குறைந்து வரும் சூதாட்ட இயந்திரங்கள்..

3
771
downing gambling machine

(downing gambling machine)

சிங்கப்பூரில், “Fruit machines” எனப்படும் சூதாட்ட இயந்திரங்களின் எண்ணிக்கை முன்பை விட தற்பொழுது குறைந்துவருகிறது.

அதன் தொடர்பிலான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிலை காணப்படுகிறது.

தற்போது 42 சூதாட்டக் கூடங்களில் அந்த இயந்திரங்கள் உள்ளன, சூதாட்ட இயந்திரங்களின் எண்ணிக்கையும் 20 சதவீதம் குறைந்து தற்போது அனைத்து தனியார் சூதாட்டக் கூடங்களிலும் மொத்தம் 1500க்கும் குறைவான இயந்திரங்களே உள்ளன.

மேலும் , இம்மாதம் முதல்,  சூதாட்டப் பிரச்சினைகளுக்கான தேசிய மன்றத்தால் விலக்கிவைக்கப்பட்ட தனிநபர்கள் யாரும் அத்தகைய சூதாட்ட இயந்திரங்களைக் கொண்ட அறைகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மற்றும் , தனிநபர்கள் உள்ளே நுழையும்முன் அவர்கள் மன்றத்தினால் விலக்கி வைக்கப்பட்டவர்களா என்று சோதிக்கவேண்டியது, சூதாட்டக் கூடங்களின் பொறுப்பாகும்.

ஆகவே , இக் கட்டாய நடவடிக்கையால், சூதாட்ட இயந்திரங்களை எளிதில் அணுகமுடியாது. அதன் மூலம் சமூகப் பாதுகாப்பு முறைகள் வலுவடையும் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

tags:-downing gambling machine

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**