(China Military Focusing South Sea Area Under Tension)
தென்சீனக் கடல் பகுதி முழுவதும் தங்களுடையதுதான் என சீனா நீண்ட காலமாக உரிமை கோரி வருகின்றது.
இதற்கு காரணம் , தென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் சீனா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் , சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா திடீரென ஆயுதகுவிப்பில் ஈடுபட்டுள்ளது.
தென் சீன கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா நில இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தளவாடங்களையும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, அந்த செய்திகளை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்சீனக் கடல் சர்வதேச கடல் பகுதி எனவே அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது என அமெரிக்க தெரிவித்து வருகிறது.
இது தொடர்பில் சீன வெளியுறவுத்துறைத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:-
தென் சீன கடல் பகுதியில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எங்களின் உரிமை. எனவே, இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது என கூறியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)