நிதி மோசடி; பஸிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

0
751
US citizenship Basil Rajapaksa

(Case Adjournment Former Minister Basil Rajapaksa)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ச மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், இந்த வழக்கை நீதிபதி கிஹான் குலதுங்க விசாரணை செய்வதற்கு எதிர்வரும் 09 ஆம் திகதி வரை இடைக்கால தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக வழக்கு விசாரணைக்காக வேறு ஒரு தினம் வழங்குமாறு அவர்களது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, நீதிபதி கிஹான் குலதுங்க வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Case Adjournment Former Minister Basil Rajapaksa