தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்

0
1476
03 month old baby dead wrong treatment

(03 month old baby dead wrong treatment)
தமிழ் நாடு திருவாரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தவறான சிகிச்சை வழங்கியதனால் குழந்தையொன்று உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், குறித்த தனியார் வைத்தியசாலையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

நாகை மாவட்டம் ஏனநல்லூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்ற கட்டடம் கட்டுபவரின் 3 மாதமேயான ஆண் குழந்தைக்கு சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து திருவாரூர் ஜவுளிக்காரத் தெருவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால், இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தவறான அறுவை சிகிச்சை அளித்ததால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, வைத்தியசாலையை முற்றுகையிட்டனர்.

மேலும் தனியார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கண்ணாடி மற்றும் நாற்காலிகளை உடைத்தும் சேதமாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், உறவினர்களை சமாதானம் செய்ததுடன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, குணசேகரன் – விஜயலட்சமி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்த நிலையில், மீண்டும் ஒரு குழந்தை பிறந்து இறந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 03 month old baby dead wrong treatment