மின்னலால் பாதிப்புக்குள்ளாகியுள்ள Telstra!

38
1491

Telstra-வின் முக்கிய கேபிள் தொகுதியொன்றை மின்னல் தாக்கிய காரணத்தினால் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு மாநிலங்களின் அவசர அழைப்பு எண்(000) தொடர்புகள் பாதிக்கப்பட்டன.

Orange மற்றும் Bowral இடங்களுக்கு இடையில் அமைந்த கேபிள் தொகுதிக்கு இவ்வாறு சேதமடைந்த காரணத்தினால் பொலீஸ் – அம்புலன்ஸ் – தீயணைப்பு பிரிவுகளுக்கான தொடர்பு எண் சேவைகள் நேற்றிரவு முதல் தடைப்பட்டன என்று Telstra தெரிவித்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலிய அவசர எண் சேவைகள் இந்த கேபிள் துண்டிப்பினால் பாதிக்கப்பட்டபோதும் உடனடியாக அவை திருத்தப்பட்டுவிட்டன என்றும் ஆனால் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு அவுஸ்திரேலிய மாநிலங்களின் பல அவசர அழைப்பு எண் தொடர்புகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை திருத்தும் வேலைகளில் தங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈட்டுபட்டு வருகிறார்கள் என்றும் Telstra தெரிவித்துள்ளது.