பரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு!

2
1186
taxi driver rape girl 10 years sentence

பரிஸில், இளம் யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கழித்து 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.taxi driver rape girl 10 years sentence

கடந்த 2008, பெப்ரவரி 23 ஆம் திகதி, பரிஸின் சோம்ப்ஸ்-எலிசேயில் இளம் பெண் ஒருவர் Orgeval நகருக்கு செல்வதற்காக வாடகைக் காரிற்காக(Taxi) காத்திருந்தார். அப்போது ஒரு நபர் வாடகைக்கார் என பதாகை பொருத்தப்பட்ட காருடன் வந்து, குறித்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அத்துடன் குறித்த நபர் காரை வேறு திசைக்கு ஓட்டிச்சென்று, அங்கு வைத்து குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதற்கு பின்னர், குறித்த பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், 8 வருடங்களின் பின்னர், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குறித்த சாரதியை கைது செய்துள்ளனர். குறித்த நபர் வாடகை கார் ஓட்டுபவர் இல்லை எனவும், அது போன்று போலியாக நடித்துள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், மரபணு சோதனை நடத்தப்பட்டு, குறித்த நபர்தான் குற்றவாளி என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அவருக்கு நேற்றைய தினம் 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**