20 மில்லியன் இலஞ்சம் பெற்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கைது

0
660
President Chief Staff Timber Corp Chairman arrested 20m bribe

(President Chief Staff Timber Corp Chairman arrested 20m bribe)

ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானியான பேராசியர் I.H.K.மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட இருவரையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

பிரபலமான ஆடம்பர விருந்தகமொன்றில் வைத்து அவர்கள் கையூட்டலை
பெற்ற தருணத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் பங்குதாரர் ஒருவரிடம் நிறுவனத்தின் பங்கு வர்த்தக செயற்பாட்டை மேற்கொள்வதற்காக 100 மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரியிருந்ததாகவும் அதில் 20 மில்லியன் ரூபா பங்கை முற்பணமாக பெற்றுள்ளனர்.

I.H.K. மஹாநாம முன்னர் காணி அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த நிலையில், அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(President Chief Staff Timber Corp Chairman arrested 20m bribe)

 

More Tamil News

Tamil News Group websites :