என்னிடம் பொய் செய்தி இல்லை; உண்மை மட்டுமே உள்ளது! துன் மகாதீர்

0
847
never tell lie true Mahathir, mahathir, mahathir news, malaysia amil news, malaysia,

{ never tell lie true Mahathir }

மலேசியாவில், தன் மீது அளிக்கப்பட்ட போலீஸ் புகார் தொடர்பில் 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், தாம் லங்காவி மாவட்டத்துக்கு செல்லும் தனிப்பட்ட விமானத்தில் கீழறுப்பு வேலைகள் செய்யப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக துன் மகாதீர் கூறியிருந்ததைத் தொடர்ந்து அவர் பொய் செய்தியைப் பரப்பியதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று குற்றம் சுமத்துங்கள். என்னிடம் போலி செய்தி இல்லை. உண்மை மட்டுமே உள்ளதாக துன் மகாதீர் கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.

பொய் செய்தி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று பெர்சாத்து கட்சியின் தலைவருமான துன் மகாதீரிடம் கோலாலம்பூர் போலீஸ் விசாரணையை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, மலேசியா வான் பொது போக்குவரத்து வாரியம் இது குறித்து விசாரணையை மேற்கொண்டதோடு துன் மகாதீரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

துன் மகாதீர் செல்லவிருந்த விமானத்தில் கீழறுப்பு வேலைகள் எதுவும் ஏற்படவில்லை என அந்த வாரியம் கூறியுள்ளது.

Tags: never tell lie true Mahathir

<<MOST RELATED CINEMA NEWS>>

*சீன, இந்திய சகோதர்களுக்கு உதவுவது என் கடமை..!

*சோதனை நடவடிக்கை மேட்கொள்ள சென்ற போலீஸ்காரர்கள் செய்த வேலை..!

*இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!

*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

<<Tamil News Groups Websites>>