(kolkata knight riders vs chennai super kings 33rd match 2018)
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறவுள்ள 33வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி கொல்கத்தா அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இம்முறை இரு அணிகளும் மோதிய முதல் போட்டி அதிகம் பேசப்பட்டு வந்த போட்டியாக அமைந்திருந்தது.
ஒரு பக்கம் இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற முதலும், கடைசியுமான போட்டியாக அமைந்திருந்தது. அத்தோடு என்ரு ரஷலின் அசத்தல் சிக்ஸர்கள் மற்றும் 203 என்ற ஓட்ட இலக்கை விரட்டியடித்த சென்னை என பல்வேறு வகையிலும் இந்த போட்டியை பற்றிய பேச்சுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
தற்போது இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் இன்று மோதுகின்றது. போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையில் அதிகரித்துள்ளது.
தொடரின் பிளே ஆஃப் சுற்று தொடர்பில் இரண்டு அணிகளும் பெரிதாக பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தையும் தக்கவைத்துள்ளன.
இதனால் இன்றைய போட்டியின் முடிவு எவ்வாறு அமைந்தாலும், மேலும் 5 போட்டிகள் இரு அணிகளுக்கும் எஞ்சியிருக்கின்றன. எவ்வாறாயினும் பின்னால் உள்ள அணிகளிடமிருந்து தங்களை சற்று காப்பாற்றிக்கொள்ள கொல்கத்தா அணிக்கு இன்றைய வெற்றி தேவைப்படுகிறது.
இரண்டு அணிகளையும் பொருத்தவரையில் துடுப்பாட்டத்தில் பலத்தை அதிகமாக கொண்டிருந்தாலும், பந்து வீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றுதான் கூறவேண்டும். அணிக்குள் புதிதாக நுழைந்துள்ள லுங்கி என்கிடியின் பந்து வீச்சு சென்னை அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஒத்துழைப்பு அணிக்கு அவசியமாக அமைந்துள்ளது. கிரிஸ் லின், சுனில் நரைன் மற்றும் ரொபின் உத்தப்பா ஆகியோர் ஓரளவு பங்காற்றினாலும், அவர்களது முழுமையான பங்களிப்பு அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உந்துகோலாக அமையும்.
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் வாய்ப்புள்ளதுடன், தோல்வியடைந்தால் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்படும் வாய்ப்பும் உள்ளது.
அதேவேளை கொல்கத்தா அணி வெற்றிபெற்றால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பின்தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
<<Tamil News Group websites>>
kolkata knight riders vs chennai super kings 33rd match 2018. kolkata knight riders vs chennai super kings 33rd match 2018