இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா

0
751
Istanbul open Rogerio Dutra Silva news Tamil

(Istanbul open Rogerio Dutra Silva news Tamil)

துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் பிரேசிலின் ரோகரி தத்ரா சில்வா வெற்றிபெற்றுள்ளார்.

இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றில் பிரேசிலின் ரோகரி தத்ரா சில்வா, சேர்பியாவின் ட்ரோய்ஸ்கியை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ரோகரி தத்ரா சில்வா, இரண்டாவது செட்டிலும் அபாரமாக ஆடி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இவர் முதல் செட்டை 6-2 என கைப்பற்றியதுடன், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.
ரோகரி தத்ரா சில்வா அரையிறுதியில் ஜப்பானின் டெரோ டேனியலை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>