(Enga Veedu Mappilai Contestant Seetha Lukshmi Live Video)
எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதற்காக ஒரு ஷோ ஆரம்பித்து 16 பெண்கள் போட்டி போட்டு இறுதியில் மூன்று பெண்கள் மட்டும் இறுதி போட்டியில் கலந்து கொண்டார்கள்.
அதில், கேரளாவில் இருந்து வந்த ‘குஞ்சு’ என்று ஆர்யா செல்லமாக கூப்பிட்ட சீதா லக்ஷ்மி, போட்டி நிறைவடைந்ததன் பின்னர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார்.
அதில் ஒரு ரசிகர் கேட்டிருந்தார். ‘நீங்கள் இப்போது பிரபலமாகி விட்டீர்கள். தமிழ்த் திரையுலகில் இளம் நடிகைகளுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணமே உள்ளன. அதுவும் பெரிய நடிகர்களுடன் வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. அவ்வாறு உங்களுக்கும் அழைப்பு வந்தால் நீங்கள் எந்த நடிகரை தேர்வு செய்வீர்கள்?’
இதற்கு சீதா லக்ஷ்மி ‘ எனக்கு மலையாளத்தில் துல்கர் சல்மானை மிகவும் பிடிக்கும். தமிழில் வாய்ப்பு கிடைத்தால் விஜய் சேதுபதியுடன் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்று பதிலளித்தார்.
எப்படியோ, ஆர்யாவின் முடிவால் நொந்து போய் இருக்கும் இந்தக் கேரளத்துப் பைங்கிளிக்கு சான்ஸ் கிடைத்தால் அதிஷ்டம் தான். பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
Tag: Enga Veedu Mappilai Contestant Seetha Lukshmi Live Video