ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

0
876
Jesse group police complaint Jamal Yunos, jamal Yunos, Jamal Yunos news, malaysia 14 election, malaysia tamil news,

Jesse group police complaint Jamal Yunos }

மலேசியாவில், மே.2 செக்கிஞ்சான் தேசிய முன்னணி வேட்பாளர், லீ யீ யுவானுக்கு வாக்களித்தால், கைமாறாக அதிர்ஷ்ட்டக் குலுக்கலில் ரிம.25 ஆயிரம் தருவதாக வாக்காளர்களுக்கு உறுதி அளித்திருப்பதாக, டத்தோ ஶ்ரீ ஜமால் யுனோஸ் மீது ‘அத்தொகுதி ஜசெக’ போலீஸில் புகார் செய்துள்ளது.

மேலும், அத்தொகுதி மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் ரிம.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவரான ஜமால் யுனோஸ் மற்றோர் உறுதியை வழங்கியிருப்பதாகவும் அதே போலீஸ் புகாரில் ஜசெக குறிப்பிட்டுள்ளது.

செக்கிஞ்சான் ஜசெக வேட்பாளர் இங் சுயீ லிம் சார்பில், தங்கும் விடுதி நிர்வாகியான 36 வயது கீவி ஆய் மேய், நேற்று மாலை மணி 4.30-க்கு, இவ்வாறு புகார் அளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற இரு வெவ்வேறு நிகழ்ச்சிகளில், அந்த இரு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருப்பதாக, இங் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருக்கின்றார்.

குறிப்பிட்ட இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட வாக்காளர்களை தேசிய முன்னணிக்கே வாக்களிக்குமாறு, ஜமால் யுனோஸ் கேட்டுக் கொண்டதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜசெக புகார் அளித்துள்ளதை, செக்கிஞ்சான் போலீஸ் நிலைய போலீஸ் அதிகாரி, இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான் காலிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறெல்லாம் தேர்தல் சட்ட விதிகளை மீறுவதற்கு, தான் வேட்பாளருமில்லை, வேட்பாளாருக்கு இடைத் தரகருமில்லையென, ஜமால் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மாறாக, சில தனிநபர்கள் வழங்கவிருந்த நிதியுதவிகளைத்தான் தாம் அந்நிகழ்ச்சிகளில் அறிவித்தாக அவர் கூறியுள்ளார்.

Tags: Jesse group police complaint Jamal Yunos

<<MOST RELATED CINEMA NEWS>>

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

<<Tamil News Groups Websites>>