(inquired Gotabhaya Rajapaksa 06 hours)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை என இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
சிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை.
ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு.
எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன, உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 2, 3 தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுகின்றார் எனவும் இனி எழுதக்கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார்.
லசந்தவின் படுகொலையின் பின்னர் லசந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறி விட்டனர்.
சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் ஆஜரானேன். முதல் வழக்கு தவணையின் முன்னிலையாகிய பின்னர் வீட்டுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு ‘கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்’ என கட்டுரை எழுதி இருந்தார்கள்.
தற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதனை இரண்டு வாரத்தின் பின்னரே நீக்கினார்கள்.
லசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
More Tamil News
- முள்ளிவாய்கால் தழிழினத்தின் விடுதலைக்காக தீக்குளித்த மண்
- கண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
- இப்படியும் ஒரு கொடுமையா? ஒரே நாளில் 19 பேர் பலி
- கடன் திட்டமா? தற்கொலை திட்டமா? நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
- கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்
- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்
- ஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags; inquired Gotabhaya Rajapaksa 06 hours