ஏப்ரல் 30 ஆம் திகதி, இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து நீஸ் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவியது. ஆனால் துப்பாக்கிச்சூடு வானத்தை நோக்கியே இடம்பெற்றுள்ளது.
இதனால், ஏற்பட்ட பரபரப்பினால் 12 பேர்கள் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Gun shoot made sensation Southern France
தனி நபர் ஒருவருடன் மேற்கொண்ட வாக்குவாதத்தால், வானத்தை நோக்கி (சத்தம் மட்டும் எழும் துப்பாக்கி) சுட்டுள்ளார். அடிக்கடி அங்கு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதால், அங்கு வீதியில் கூடியிருந்த மக்கள் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதாக நினைத்து அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர், உடனடியாக சம்பவத்தை விளங்கிக்கொண்டு, துரிதமாக செயற்பட்டனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபரை உடனடியாக கைது செய்தனர். மக்கள் சிதறி ஓடியதில், பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . அவர்களின் சிலரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துப்பாக்கியின் சத்தம் மிக பயங்கரமாக கேட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு மூன்று மணிநேரம் நிலவியதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
**Most related Tamil news**
- பிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்!
- பிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு!
- எப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சேவை இடைநீக்கம்
- எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி
**Tamil News Groups Websites**