{ deposit applicants nominees }
மலேசியாவில், வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று சபாவின் உஸ்னோ பாரு கட்சி வேட்பாளர்களின் ‘டெபோசிட்’ பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விட்ட நபரின் மீது, அக்கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து போலீஸ் புகார் கொடுத்து வருகின்றனர்.
அக்கட்சியின் தெனோம் கிளைத் தலைவரான நோர்லியா யுந்தோங், களவுப் போன அந்தப் பணம் தொடர்பில் போலீஸ் விசாரணையை தொடங்க வேண்டும் என்று லபுவான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் தொடர்பில் தெனோம் காவல் நிலையத்திலும் தாம் மேலும் ஒரு புகாரை கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில், அக்கட்சியின் தலைவர் மற்றும் சில உறுப்பினர்களிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. உஸ்னோ பாரு கட்சியின் சார்பில் தேர்தலில் களம் இறங்கவிருந்த வேட்பாளர்கள், தங்களின் கட்சி நிதி ஆலோசகரிடம் வேட்புமனு தாக்கலுக்கான முன்பணத்தை கொடுத்து வைத்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் தினத்தன்று, அந்த நிதி ஆலோசகர், அப்பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அதனால், பலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையில், அக்கட்சி வேட்பாளர்களின் பணத்தைத் திருப்பி தரும் முயற்சியில் கட்சி ஈடுபட்டிருப்பதாக அதன் துணைச் செயலாளர் ஷாருடின் சுகிமீன் கூறியுள்ளார்.
‘காணாமல்’ போன தங்களின் பணத்திற்கு அக்கட்சியின் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த வேட்பாளர்களில் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags: deposit deposit applicants nominees
<<MOST RELATED CINEMA NEWS>>
*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!
*நான் தோல்வியுறும் வேட்பாளர் அல்ல..!
*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?
*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்
*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!
*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!
*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!
<<Tamil News Groups Websites>>