Selfie Bridge Horror Brazil
செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு ஏற்பட்ட அவலநிலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசிலில் பாலமொன்றின் மேல் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர், பின்னர் அப்பாலம் உடைந்து விழுந்தமையால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
செல்பி எடுத்துக்கொண்டிருந்த போதே, பாலம் உடைந்து விழுந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தோர், 22 , 15 மற்றும் 16 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 33 அடி பாலமே உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விபத்தில் பெண்கள் பலத்த காயங்களுக்குளாகியுள்ளனார். அவர்களுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.