சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

0
902
PM announces gifts private workers, PM announces gifts private, najib, najib tun rasak, prime minister malaysia,

{ PM announces gifts private workers }

மலேசியா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேம்பாட்டிற்கும் தங்களின் அர்ப்பணிப்புகளை வழங்கிய தனியார் துறை ஊழியர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சில பரிசுகளை அறிவித்துள்ளார்.

முதல் பரிசாக மலேசிய தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பிற்கு (எம்.டி.யூ.சி) 30 லட்சம் வெள்ளியை அரசாங்கம் வழங்குவதாகவும் அந்நிதியை தனது சங்கங்களுக்கு அந்த கூட்டமைப்பு பிரித்து வழங்குமென இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டாம் பரிசாக வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியமைத்தால் தற்போது இருக்கும் குறைந்தபட்ச சம்பளமான 1000 வெள்ளி மற்றும் 920 வெள்ளி அதிகரிக்கப்படும் எனவும் புதிய சம்பள உயர்வு இந்த ஆண்டுக்குள் அறிவிக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.

மூன்றாவதாக மகிழ்ச்சியான குடும்பத்தை தொழிலாளர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் தனது மனைவி பிரசவத்திற்கு பின்னர் கணவருக்கு 3 நாள் கட்டாய சிறப்பு விடுமுறையை வழங்கும் திட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கம் அமல்படுத்தும். இந்த திட்டத்தை அமல்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படும் என நஜீப் கூறியுள்ளார்.

Tags: PM announces gifts private workers

<<MOST RELATED CINEMA NEWS>>

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

<<Tamil News Groups Websites>>