முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி

4
2143
Mukesh Ambani Reliance Industries net profits latest gossip

(Mukesh Ambani Reliance Industries net profits latest gossip )

இந்தியாவின் நம்பர் 01 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோடிக்கான லாபங்களை ஈட்டி முன்னிலையில் நிற்கின்றது .இந்நிலையில் மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில் ரூ.9,635 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூபாய் 107 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல உற்பத்திகளை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்து வருகின்றது .

Mukesh Ambani Reliance Industries net profits latest gossip

 

பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை நிலையங்கள், இயற்கை எரிவாயு எடுப்பது, டெக்ஸ்டைஸ் உள்பட பல தொழில்களை முகேஷ் அம்பானி மேற்கொண்டு வருகிறார்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  கடந்த ஆண்டு மார்ச்சுடன் முடிந்த 4வது காலாண்டில் 8046 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் , இந்த ஆண்டு மார்சுடன் முடிந்த காலாண்டில் ரூ. 9 435 கோடி நிகர லாபம் கிட்டியுள்ளது. இது 17.3 சதவீதம் அதிகமாகும்.

ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ மார்சுடன் முடிந்த காலாண்டில் 510 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு ஷேர் கடந்த ஆண்டு 13.6 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ரூ.15.9 ஆக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த ஓராண்டின் நிகர லாபம் ரூ.36,075 கோடி என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 98 கோடி வருமானம் ஆகும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Mukesh Ambani Reliance Industries net profits latest gossip