தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று மாலை யாழில்!

11
989
May Day Meeting Tamil National Alliance Jaffna Point Pedro tamilnews

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான மேதின கூட்டம் இன்று இடம் பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், யோ.ரஜனி தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு வெல்லாவெளியில் குறித்த தொழிலாளர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக தொழிலாளர் பண்பாட்டுப் பவனி போரதீவுப்பற்று பிரதேசசபை அமைந்துள்ள வெல்லாவெளி சந்தியிலிருந்து ஆரம்பமாகி, மே தினப் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ள வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இடம் பெறும் மேதினக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேதின அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெறவுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :