அஜித்தின் ஸ்பெஷல் TOP-10 பட தொகுப்பு விபரம் உள்ளே

0
1118
List of the best Ajith Kumar movies

List of the best Ajith Kumar movies

அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகும் தினம் தான் அவர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல். திரையுலகில் எந்தவித பின்னணியும் இல்லாமல் ஒருவர், உச்ச நட்சத்திரமாகிவிடுவது என்பது அசாதரணம்.

இதன் காரணமாக தல அஜித் என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரமானது.

அதற்கு தேவையான கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை, மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம். இவை மூன்றுமே அஜித்திடம் இருந்ததால் இன்று அஜித் இருக்கும் லெவலே வேற என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான இன்று அவரது படங்களில் முக்கிய சில படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. அஜித்தின் முதல் படம் – அமராவதி: அஜித் ஏற்கனவே ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தாலும், தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் இதுதான்.

சங்கவி நாயகியாக நடித்திருந்த இந்த படத்தை செல்வா இயக்க, சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாகியது. அஜித்தின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2. தளபதி விஜய்யுடன் அஜித் நடித்த ஒரே படம் – ராஜாவின் பார்வையிலே: அஜித், விஜய் இணைந்து நடித்த முதல் மற்றும் ஒரே படம் இதுதான்.

இசைஞானி இசையில் ஜானகி செளந்தர் இயக்கிய இந்த படத்தில் அஜித், விஜய் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி போல் அஜித்-விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என்ற சரித்திரம் பேசும் வகையில் அமைந்த படம் இது.

3. அஜித்தின் முதல் சூப்பர் ஹிட் படம் – ஆசை: அஜித், சுவலட்சுமி, பிரகாஷ் நடிப்பில் வசந்த் இயக்கிய படம் தான் ஆசை. தேவா இசையமைப்பில் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட். ரொமான்ஸ் மற்றும் த்ரில் காட்சிகளுடன் அமைந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அஜித்தின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

4. தேசிய விருது பெற்ற அஜித்தின் முதல் படம் – காதல் கோட்டை: அஜித், தேவயானி நடிப்பில் இயக்குனர் அகத்தியன் இயக்கிய இந்த படம் தான் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

மேலும் இந்த படம் தமிழில் சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்று தந்தது. பார்க்காமலேயே காதலிக்கும் காதலர்களின் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் கிளைமாக்ஸ் இன்று வரை பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. அஜித்தின் முதல் இருவேட திரைப்படம் – வாலி: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் நடித்த இந்த படம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. அவர் ஹீரோ, வில்லன் என முதன்முறையாக இரண்டு வேடங்கள் ஏற்று நடித்த படம். மேலும் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு முதல்முதலில் பிலிம்பேர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

6. அஜித்தின் முதல் இந்தி படம் – அசோகா: தமிழ் படங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்த அஜித் நடித்த முதல் இந்தி படம் இதுதான். ஷாருக்கான், கரீனாகபூர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தில் அஜித்தின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

7. அஜித்தின் முதல் மூன்று வேட திரைப்படம் – வரலாறு: கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் சிவசங்கர், விஷ்ணு மற்றும் ஜீவா என மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் அஜித் நடித்திருந்தார். அசின் நாயகியாக நடித்திருந்த இந்த படம் அஜித்தின் வெற்றிப்படங்களில் ஒன்று.

8. அஜித்தின் முதல் தமிழ் ரீமேக் படம் – பில்லா: சூப்பர் ஹிட்டான பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம் தமிழ் திரையுலகில் தோன்றிய காலத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படமும் ரீமேக் செய்யப்பட்டது. அஜித், நயன்தாரா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய இந்த படம் ஒரிஜினல் படம் போலவே சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வெற்றிக்கு யுவனின் இசை ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

9. அஜித் திரைக்கதை எழுதிய முதல் படம் – அசல்: நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருந்த அஜித், முதன்முதலில் இயக்குனர் சரணுடன் இணைந்து திரைக்கதை எழுதிய படம் அசல். சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10. ஸ்ரீதேவியுடன் அஜித் நடித்த முதல் மற்றும் ஒரே படம் – இங்கிலிஷ் விங்கிலிஷ்: இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியுடன் அஜித் நடித்த ஒரே படம் ‘இங்கிலிஷ் விங்கிலீஷ்’. இந்த படத்தில் நடித்ததால் அஜித் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் குடும்ப நண்பர்களாக மாறினர்.

சமீபத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கிற்கு ஷாலினி அஜித் நேரில் மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

**Tamil News Groups Websites**