(chamal rajapaksa gotabaya rajapaksa mahinda rajapaksa)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சித் தரப்பின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினர், கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சமல் ராஜபக்ஷ நடுநிலையாக செயற்படக் கூடிய நபர், இதனால் அவர் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டார். இதன் காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அங்கம் வகிக்கும் முற்போக்கு அணியின் சார்பில் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கூட்டு எதிர்கட்சி மூன்று அணிகளாக பிளவுப்பட்டு செயற்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சிங்கள தேசியவாத சக்திகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினர், கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவும் ஆதரவு வழங்க இந்த அணியினர் முன்வந்துள்ளனர். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால், நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால் பொதுத் தேர்தலில் மூலம் பிரதமராக பதவிக்கு வரலாம் என மஹிந்த ராஜபக்ஷ எண்ணுவதாக கூறப்படுகிறது.
அதேவேளை வாசுதேவ நாணயக்கார உட்பட இடதுசாரிகளும் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதன் காரணமாகவே கோத்தபாயவுக்கு பதிலாக சமல் ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள இடதுசாரிகள் பரிந்துரைத்துள்ளதாக பேசப்படுகிறது.
More Tamil News
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
- 11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன
- விசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்!
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- பாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்
- வெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்
- தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:chamal rajapaksa gotabaya rajapaksa mahinda rajapaksa, chamal rajapaksa gotabaya rajapaksa mahinda rajapaksa