கன்னியமர்வில் இவ்வளவு செலவா? கொழும்பு மாநகர சபையில் நடந்த சம்பவம்

0
1576
15 lakhs spent Colombo Municipal Council First session

(15 lakhs spent Colombo Municipal Council First session)
கொழும்பு நகரசபையின் கன்னியமர்வின் போது 119 உறுப்பினர்களின் உணவுக்கு மாத்திரம் 15 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நகரசபை உறுப்பினர் சரித குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் கன்னியமர்வு இடம்பெற்றது.

முதல் நாள் அமர்விலேயே 119 உறுப்பினர்களுக்காக இவ்வாறு அதிகளவிலான நிதி செலவு செய்தமைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த அவர்,

நகரசபை உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதாகக் கூறி இந்த வைபவத்தில் கலந்துகொண்ட 500 க்கும் அதிகமான மக்களுக்கும் உணவு கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

நகர மக்களின் பணத்தை இவ்வாறு வீணடிப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் அடுத்த நகரசபை கூட்டத்தில் தனது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நகரசபை பொருளாளர் கே.ரி. சித்ரபாலவிடம் வினவியபோது, நகரசபையின் கன்னியமர்வுக்கு ஒரு உறுப்பினருக்கு 05 நபர் வீதம் இந்த விழாவிற்கு பங்குபற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு காலை, பகல் மற்றும் இரவு உணவுக்காக 15 இலட்சம் செலவாகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; 15 lakhs spent Colombo Municipal Council First session