நாளை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளமை உறுதி: 9.30 மணிக்கு ஆஜராகுமாறு அமைச்சர்களுக்கு அழைப்பு

0
720
srilankan goverment again change cabinet Lankan latest news

அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதால், காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அமைச்சரவை நியமனங்கள் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :