ஆண்ட்ரியாவின் ஆக்ஷன்….! புதிய அவதாரம் தொடர்பில் தகவல்

0
1348
Ka first look: Andrea Jeremiah looks so fierce in this new poster

Ka first look: Andrea Jeremiah looks so fierce in this new poster

‘தரமணி’ படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே தனுஷின் ‘வடசென்னை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்போது சமீபத்தில் விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு த்ரில்லர் படத்தில் பிரசன்னாவுடன் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஆண்ட்ரியா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘கா’. ‘கா’ என்றால் காடு என்று அர்த்தம். இந்த படத்தை நாஞ்சில் என்பவர் இயக்கவுள்ளார்.

அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த அதிரடி ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது.

இன்று படப்பிடிப்பு தொடங்கவுள்ளதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் இவருடைய பெயர் மட்டும் தான் வெளியாகியுள்ளது, மற்றைய ஹீரோயின் க்கான செலக்சன் நடைபெறுதாம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

**Tamil News Groups Websites**