இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!

0
1186
இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!

மேஷ ராசி நேயர்களே !
உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே !
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நேற்று செய்யாமல் விட்ட வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.

மிதுனம் ராசி நேயர்களே !
யோகங்கள் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வரவு திருப்தி தரும்.

கடக ராசி நேயர்களே !
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

கன்னி ராசி நேயர்களே !
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடம், பூமியால் லாபம் கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் சம்மந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி நேயர்களே !
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடுமாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். உடன் பிறப்புகளால் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

தனுசு ராசி நேயர்களே !
எதிர்பாராத லாபம் இல்லம் வந்து சேரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகர ராசி நேயர்களே !
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க அலைச்சல் ஏற்படும். பயணத்தால் விரயமுண்டு. எதையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது.

கும்பம் ராசி நேயர்களே !
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம் ராசி நேயர்களே !
நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.

எண்  
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A,I,J,Q,Yஆகியவை.

1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.

தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும்.

கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

ஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும். 2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.

சூரியனுக்குரிய காலம்
ஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.

சூரியனுக்குரிய திசை
சூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.

அதிர்ஷ்ட கல்
சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும், நன்மதிப்பும் உண்டாகும்.

பரிகாரங்கள்
ஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி -1,10, 19, 28
அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அதிர்ஷ்ட தெய்வம் – சிவன்

ம் எண்

இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் B,K .Rஆகியவை.

குண அமைப்பு
2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள். சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.
இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு.

எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.
வேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள்.

தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள்.

ஆதலால் சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும். தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள்.

மெலிந்த குரலில் பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால் இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி, தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம் எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும். அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.
சந்திரனுக்குரிய காலம்

ஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும். சந்திரன் இரவில் பலம் உள்ளவன்.
சந்திரனுக்குரிய திசை
சந்திரனுக்குரிய திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கல்
சந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள் குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.

பரிகாரங்கள்
சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி- 1,10,19,3, 12,21,30
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, பொன் நிறம்
அதிர்ஷ்ட திசை -தென் கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை -திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட கல் – முத்து, சந்திரகாந்தகல்
அதிர்ஷ்ட தெய்வம் – வெங்கடாசலபதி, துர்க்கை

3 ம் எண்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள்.

தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.

இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது-

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.

கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள். 5,6 ம் எண்களில்  பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.
குருவுக்குரிய காலம்
நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச் சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள்.

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.குருவுக்குரிய திசை
குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கல்
குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.

பரிகாரங்கள்

குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி,-3,12,21,30
அதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்
அதிர்ஷ்ட திசை – வடக்கு
அதிர்ஷ்ட கிழமை – வியாழன்
அதிர்ஷ்ட கல் -புஷ்பராகம்
அதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி

4 ம் எண் :

ராகு : 4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 4 ம் எண் என்றால் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உங்களுக்கு எதிர்பாலினத்தவரால் சங்கடம் உண்டு. காதல் கசக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு தாமதம் உண்டு. வாகன வகையில் செலவு உண்டு. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வசிப்பிட மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை நன்மை தரும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெள்ளி நிறம், பச்சை..
எண்கள் : 5.
கிழமை : புதன்
தெய்வம் : ஐயப்பன்.

5 ம் எண் :

புதன் : 5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 5 ம் எண் என்றால் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் புதிய சிந்தனை நல்ல பலன் தரும்.நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களிடம் குறைகண்டுபிடிப்பதால் அவர்களை திருப்தி படுத்த முடியாமல் திணறுவீர்கள். பணம் சிக்கனம் குறித்த சிந்தனை பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : நீலம் .
எண்கள் : 8
கிழமை : சனி .
தெய்வம் : மகா விஷ்ணு.

6 ம் எண் : 

சுக்கிரன் : 6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 6 ம் எண் என்றால் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் வேலை வாய்ப்பு , வியாபாரம், புதிய தொழில் முயற்சி, ஆகிய அனைத்திலுமே வெற்றி உண்டு. விருந்து நிகழ்ச்சி, உறவினர் வருகை என பல சாதகமான மாறுதல் உண்டு. திருமண பேச்சு சாதகமாகும்.சிறப்பான பொருளாதார மேன்மை உண்டு. புதிய வீடு, சொத்து வாங்கும் நேரம்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை.
எண்கள் : 4
கிழமை : திங்கள்
தெய்வம் : துர்கை அம்மன்

7 ம் எண் : 

கேது : 7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 7 ம் எண் என்றால் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் தேங்கி நின்ற வழக்கு சாதகமாக முடியும்.பயணங்களால் நன்மை உண்டு. புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். வாகன வகையில் மாற்றமும் செலவும் உண்டு. கடன் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நலம். உறவினர் தவிர அனைத்து தரப்பு ஆதரவும் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பச்சை
எண்கள் : 5
கிழமை : புதன்.
தெய்வம் : விநாயகர்

8 ம் எண் :

சனி : 8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 8 ம் என்றால் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் பணவரவு மகிழ்ச்சி தரும் .சகோதரர் வழியில் சச்சரவு உண்டு.. மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.. வியாபார வெற்றி உண்டு. அந்நியரால் இடையூறு உண்டு,கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயங்களில் ஜாமீன், உத்தரவாதம் தராமல் இருப்பது நலம்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள்.
எண்கள் : 3
கிழமை : வியாழன்.
தெய்வம் : ஐயப்பன்,

9 ம் எண் :

செவ்வாய் : 9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 9 ம் என்றால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உத்தியோக மேன்மை கிடைக்கும். பூமி யோகம் உண்டு. பரம்பரை சொத்து வழக்கு சாதகமாக முடியும். விளையாட்டு துறை, அரசியல், அரசு வேலையில் உள்ளவர்களுக்கு வெற்றியும் நல்ல முன்னேற்றமும் உண்டு. வாகன யோகமும் பண வரவும் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம் இது,
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை,பச்சை.
எண்கள் : 6
கிழமை : வெள்ளி.
தெய்வம்.: ரங்கநாதர்

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்