ரவி, ராஜபக்ஷவுக்கு அமைச்சு பதவிகள் : தெற்கு அரசியலில் சலசலப்பு

0
1158
ministry post sarath fonseka rajapaksha

(ministry post sarath fonseka rajapaksha)
புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு அரசியல் வட்டாரங்களில் இரகசிய பேச்;சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளை அடுத்தும், விஜேதாச ராஜபக்ச, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டை அடுத்தும் பதவி விலகியிருந்தனர்.

இந்த நிலையில் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஐ.தே.க. திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, புதிய அமைச்சரவையில் திலக் மாரப்பன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தொடர்ந்தும் அதே பொறுப்புக்களையே வகிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கும் ஐ.தே.க. விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மே 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூடுவதற்கு முன்னர், புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐதேக தரப்பில் ஜனாதிபதியிடம்; வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags :ministry post sarath fonseka rajapaksha, ministry post sarath fonseka rajapaksha