காலாவதியான உர மூடைகள் விற்பனைக்கு முயற்சி; நுகர்வோர் அதிகார சபை அதிரடி நடவடிக்கை

0
795
Try selling Expired fertilizer

(Try selling Expired fertilizer) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் உறைகளை மாற்றி விற்பனை செய்யப்படவிருந்த சட்டவிரோத உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் உறைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமை போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உரத்தின் காலாவதி தினத்தை 2019 இல் இருந்து 2020 என்றும் மாற்றியமைக்கப்பட்டு, பொதிசெய்யப்பட்டு விற்பனைக்கு தயார்ப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு தயார்ப்படுத்தப்பட்டிருந்த 27 கிலோகிராம் கொண்ட உர மூடைகள் 3600, நுகர்வோர் அதிகார சபையின் விசேட சோதனைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா குணுமுல்ல பிரதேசத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து நேற்றைய தினம் குறித்த சட்டவிரோத உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உரத்தின் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியானவை என்றும் நுகர்வோர் அதிகார சபை தெரிவிக்கின்றது.

நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக பொதி செய்யப்பட்ட உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த தனியார் நிறுவனத்தின் முகாமையாளரைக் கைது செய்துள்ளதுடன், நுகர்வோர் கட்டுப்பாடுகளை மீறியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதோடு, முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த தனியார் தொழிற்சாலைக்கு எதிராக மினுவாங்கொடை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Time Tamil News Today

Tamil News Group websites :

Tags; Try selling Expired fertilizer