பியரை பரிசாகப் பெற மறுத்த மாணவன் ; கலேவெலவில் சம்பவம்

0
862
Student refused receive gift beer

(Student refused receive gift beer) கலேவெல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவன் ஒருவர், புத்தாண்டு விளையாட்டு விழாவில் போத்தலுக்கு வளையம் போடும் போட்டியில் முதலிடம் பெற்றார்.

இதற்காக புத்தாண்டு விளையாட்டு விழாவினை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினர் பரிசளிப்பு விழாவின் போது, பரிசாக ஒரு போத்தல் பியர் மதுபானத்தை வழங்கியுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த குறித்த மாணவன், பியர் போத்தலுக்குப் பதிலாக மென்பான போத்தல் ஒன்றைத் தருமாறு ஏற்பாட்டுக் குழுவினரிடம் கேட்ட போது, அவர்கள் மென்பானத்தை கொடுக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் அந்த மாணவன் பரிசாகக் கிடைத்த பியர் போத்தலை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு அந்தப் பணத்தில் மென்பானப் போத்தல்கள் இரண்டினை வாங்கி தனது நண்பர்களுக்கும் கொடுத்து அருந்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பம்பாவ ரஜமாக விகாரையின் விகாராதிபதி லேனல மங்கள ஹிமி தேரர் கூறுகையில், நமது பாரம்பரியத்திற்கு ஏற்ற விளையாட்டுக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த மாணவன் ஏனைய மாணவர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News Today

Tamil News Group websites :

Tags; Student refused receive gift beer