(norwegian bliss biggest norwegian cruise line ship ever begins)
உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான நார்வேஜியன் பிலிஸ் (Norwegian bliss) தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டு தொடங்கியது. கடந்த 2016ம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கிய இந்தக் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுற்று தற்போது இந்தக் கப்பல் நார்வேஜியன் குரூஸ் லைனர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பயணம் கடந்த 21ம் திகதி பயணத்தைத் தொடங்கியது.
19 மாடி உயரம் கொண்ட இந்தக் கப்பலில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறும் அளவிற்கு நகரும் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆயிரத்து 82 அடி நீளமும், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 28 டன் எடை கொண்ட இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான நீச்சல்குளம், குளித்துக் கொண்டே திரைப்படம் பார்க்கும் வசதி, மிகப்பெரிய நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கள், அசர வைக்கும் மதுபான பார், அனைத்திற்கும் மேலாக சிறிய ரக கார்கள் ஓட்டி மகிழும் வகையில் ரேஸ் மைதானம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் உடற்பயிற்சிக் கூடம், சூதாட்ட விடுதி, வணிக வளாகம் போன்றவையும் நார்வேஜியன் கப்பலில் அமைந்துள்ளன. இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தக் கப்பல் இங்கிலாந்தின் மாண்ட்போர்டு துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி தனது முதல் பயணத்தை கடந்த 21ம் திகதி தொடங்கியுள்ளது.
OUR GROUP SITES