மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? இம்ரான் தாஹிர்!

0
722
Imran praised mahendra singh Twitter

தோனியின் அதிரடியால் சென்னை அணி வெற்றி பெற்றதால் அதன் சந்தோசத்தை மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? என இம்ரான் தாஹிர் கலக்கல் ட்விட் போட்டு வெளிப்படுத்தியுள்ளார்.Imran praised mahendra singh Twitter

பெங்களூரு அணிக்கு எதிரான 24- ஆவது IPL லீக் போட்டியில் தோனியின் அதிரடியால் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். இதனால், 206 ரன்கள் என்ற கடினமான இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந் நிலையில், சென்னை அணியின் தலைவர் தோனி சிக்சர் மழை வீசி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதனையடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா? என இம்ரான் தாஹிர் கலக்கல் டுவிட் பதிவிட்டுள்ளார். மேலும் டுவிட்டரில், “காட்டுல வேட்டையாடுற சிங்கம் பார்த்திருப்ப.. காக்கி சட்டை போட்ட சிங்கம் பார்த்திருப்ப. மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா? ஓங்கி அடிச்சா 110 மீட்டர் தூர சிக்ஸ் டா.. பாக்குறியா..? இது பொசுக்குற கூட்டம். கொஞ்சம் தள்ளி நில்லு கண்ணா.. எடுடா வண்டியா.. போடுடா விசில” என பதிவிட்டுள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணிக்காக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here