(Ice Cream Sandwich Tamil Recipe)
தேவையான பொருட்கள் :
* வெண்ணெய் – 100 கிராம்
* சர்க்கரை – ½ கப் (100 கிராம்)
* வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
* முட்டை – 1
* மைதா – ½ கப் (60 கிராம்)
* கொக்கோ பவுடர் – ½ கப் (50 கிராம்)
* உப்பு – ஒரு சிட்டிகை
* வெண்ணிலா ஐஸ்கிரீம் – ½ லிட்டர்
செய்முறை :
* முதலில் கேக் பேனை அவனில் 180 டிகிரி ப்ரிஹீட் செய்து வைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்னர் முட்டை சேர்த்து கலந்து மைதா மாவு, கொக்கோ பவுடர், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கெட்டியாக கலக்கி வைக்கவும்.
* பின் அவற்றை ப்ரிஹீட் செய்யப்பட்ட அவனில் நன்கு பரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் பேக் செய்யவும்.
* கேக்கை பேனில் இருந்து எடுத்து இரு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* இப்போது ஒரு பாதியை பேனில் வைத்து வெண்ணிலா ஐஸ்கிரீமை அதன் மேல் சரிசமமாக பரப்பி பின் மற்றொரு பாதியை அதன் மேல் வைக்கவும்.
* இரவு முழுவதும் ப்ரிஜில் வைத்து எடுக்கவும்.
* பின் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!