Bill Cosby court case
நகைச்சுவைக் கலைஞர் பில் கொஸ்பி, மீதான பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு தன்னுடன் பழகிய பெண்ணொருவரை , கொஸ்பி போதைமருந்து கொடுத்து மயக்கமடைய செய்து, அவருடன் உறவு கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
80 வயது கொஸ்பி மீது 3 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
ஒவ்வொரு குற்றத்துக்கும் பத்தாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அவ்வாறு விதிகப்படும் பட்சத்தில் அவர் தனது இறுதிக்காலங்களை சிறையிலேயே களிக்க நேரிடும்.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றிலிருந்து வெளியே வந்த கொஸ்பி, சத்தமிட்டவாறே வெளியே வந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தண்டனையை எதிர்த்து க்ஸ்பியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அமெரிக்காவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வழக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.