(5 foods prevent balding) தலையில் சொட்டை விழுந்த பிறகு, அதுவும் பார்வைக்கு அழகாகத் தான் தெரியலாம். ஆனால் அதனை அனைவரும் ஒரு குறையாகவே பார்க்கின்றனர். விலைமதிப்புள்ள முடி உதிர்வு சிகிச்சை பெற இயலாதவர்களுக்கு உதவும் உணவுப் பொருள் தீர்வுகளை இங்கே காணலாம். முட்டை மற்றும் பால் பொருட்கள் முடி வளர்ச்சிக்கு பயோடின்(விட்டமின் பி7) மிகவும் உதவுகிறது. முட்டைகள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களில் பயோடின் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முடி வளர உதவும் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்பு, ஜிங்க், ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.
ஓட்ஸ் சொட்டை விழுவதை தவிர்க்க உதவும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் முக்கியமானது. இதில் நார்ச்சத்து, ஜிங்க், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. முடி வேர்களை வலுப் பெறச் செய்யும் பீட்டா குளுகான் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாதாம் பருப்பு இதில் அதிகப்படியான பயோடின், மக்னீசியம் உள்ளது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தொடர்ச்சியான பாதாம் உட்கொள்ளல் உறுதியான, ஆரோக்கியமான, வேகமான முடி வளர்ச்சியை அளிக்கிறது. வால்நட் இதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதிலுள்ள விட்டமின் பி7 முடி உதிர்வை தடுத்து, வேர்களை வலுவாக்கி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு வால்நட் தீர்வாக அமையும்.
<<தமிழ் ஹெல்த் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>
மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…! உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…! உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!